சசிகலா பொதுச்செயலரான அதே நேரத்தில் பேராவூரணி அதிமுகவினர் 'எதிர்ப்பு' அபிஷேகம்!

சென்னை: அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலாவுக்கு எதிராக நூதன போராட்டங்களை நடத்துகின்றனர் அக்கட்சி தொண்டர்கள். பேராவூரணியில் அதிமுகவை காப்பாற்ற அக்கட்சி தொண்டர்கள் சிறப்பு அபிஷேகம் செய்துள்ளனர்.

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலர் பதவியை இன்று சசிகலா ஏற்றுக் கொண்டார். அதே நேரத்தில் சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட தொண்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

இதேபோல் சசிகலா பொறுப்பேற்ற நேரத்தில் பேராவூரணி அதிமுக தொண்டர்கள் நூதன வழிபாடு போராட்டம் நடத்தியுள்ளனர். பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோவிலில் முன்னாள் கவுன்சிலர் ஆனந்தன் தலைமையில் ஒன்றுகூடிய அதிமுக தொண்டர்கள் கட்சியை காப்பாற்ற கோரி பால் அபிஷேகம் செய்தனர். அப்போது சசிகலாவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Source: OneIndia