நியூசிலாந்தில் 2017ம் ஆண்டு பிறந்தது.. வான வேடிக்கையுடன் மக்கள் கொண்டாட்டம்

ஆக்லாந்து: 2017ம் ஆண்டு நியூசிலாந்தில் இனிதே பிறந்தது. மக்கள் புத்தாண்டை பட்டாசுகள் வெடித்து, வான வேடிக்கையுடன் வரவேற்றனர்.

2016ம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதி இன்று. உலகின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாட்டில்தான் எப்போதுமே சூரியன் முதலில் உதயமாவது வழக்கம்.

இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணியானது. எனவே நியூசிலாந்து பொதுமக்கள், வான வேடிக்கையுடன் 2017 புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

Happy New Year! #Wanaka #NewZealand #2017 Bring on Monte! pic.twitter.com/fKHXAdGOta

— Hayden Paddon (@HaydenPaddon)

படிப்படியாக ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் என புத்தாண்டு விடியல் கண்டபடி இருக்கும். இந்தியாவில் இரவு 12 மணிக்குமேல் மக்கள் ஆரவாரமாக புத்தாண்டை கொண்டாட ரெடியாக உள்ளனர்.

Source: OneIndia

Facebook Comments