சசிகலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு- கூண்டோடு நிர்வாகிகள் ராஜினாமா!கருப்பு தினமாக அனுசரிப்பு!

சசிகலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு- கூண்டோடு நிர்வாகிகள் ராஜினாமா!கருப்பு தினமாக அனுசரிப்பு!

சென்னை: சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து வருகின்றனர். சில இடங்களில் அதிமுக தொண்டர்கள் கருப்பு தினமாகவும் அனுசரித்தனர்.

அதிமுக பொதுச்செயலர் நாற்காலியில் சசிகலா அமர்ந்துள்ளார். இதற்கு அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஈரோட்டில் அதிமுக நிர்வாகிகள் பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். பல இடங்களில் சசிகலா பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் அதிமுக தொண்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து துக்க தினமாகவும் அனுசரித்தனர். முன்னதாக சசிகலா பொதுச்செயலர் நாற்காலியில் உட்கார்ந்தபோது சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் சுவாதி ஆனந்த் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.

Source: OneIndia

Author Image
murugan