2016-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் 2017-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக இருக்கிறார்கள். அந்தந்த நாட்டு மக்கள் அவர்களின் தலைநகரில் கண்கவர் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.
இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியாகும்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் சரியாக நள்ளிரவு 12.00 மணியாகும். இந்த நேரத்தில் அங்குள்ள மக்கள் கண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்றனர்.
இதேபோல் ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவிலும் 2017 புத்தாண்டை வரவேற்றனர். நியூசிலாந்து வெளிங்கடனில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கே புத்தாண்டு கொண்டாடப்பட்டு விட்டது.
புவி அமைப்பின் படி டோங்கா மற்றும் 2 நாடுகள் இந்திய நேரப்படி இன்று மதியம் மூன்றரை மணிக்கு 2017 புத்தாண்டை முதன் முதலாக வரவேற்றது. அதன் பின் நியூசிலாந்து மாலை 4.30 மணியளவிலும் ஆஸ்திரேலியா 6.30 மணியளவிலும் புத்தாண்டை வரவேற்றது.
Source: Maalaimalar