விரைவில் வங்கி சேவைகள் பழைய நிலைக்கு திரும்பி விடும்: மோடி உரை

புதுடெல்லி:

புத்தாண்டு பிறப்பையொட்டி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஊழலும், கருப்பு பணமும் நல்லவர்களையும் வீழ்த்தி விடுகிறது என தெரிவித்தார். மேலும் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்ற மரபு காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற துடிப்பு மக்களிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை நீண்ட நாட்களுக்கு பலன் அளிக்கும். தீயதை ஒழிக்க மக்களும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும்  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தவறான பாதையை ஒழிக்க புதிய தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவியுள்ளது என மோடி தெரிவித்துள்ளார்.

Source: Maalaimalar

Facebook Comments