சீனா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது.. மக்கள் உற்சாக கொண்டாட்டம்

சிட்னி: சீனா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளில் 2017 ஆம் ஆண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்ததை அடுத்து வானவேடிக்கையுடன் மக்கள் உற்சாக கொண்டாடினர்.

இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியாகும்போது ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது. அப்போது மெல்போர்னில் கூடியிருந்த மக்கள் கண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்றனர். பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

வாணவேடிக்கையால் ஆஸ்திரேலியா தலைநகரம் சிட்டினியில் கோலாகலமாக புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. புத்தாண்டையொட்டி பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வந்திருந்தனர். மெல்போர்ன், சிட்னி, கேன்பெரா, ஹானியரா பகுதிகளில் மக்கள் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து சீனா, சிங்கப்பூரிலும் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்ததையடுத்து, இந்நாடுகளில் உள்ள மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Source: OneIndia