சசிகலாவுடன் நடிகர் பிரபு அவரது அண்ணன் ராஜ்குமார் சந்திப்பு

சசிகலாவுடன் நடிகர் பிரபு அவரது அண்ணன் ராஜ்குமார் சந்திப்பு

சென்னை: நடிகர் பிரபு அவரது அண்ணன் ராஜ்குமார் மற்றும் சிவாஜி குடும்பத்தினர் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலாவை சந்தித்து வாழத்து தெரிவித்தனர்.

அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக சசிகலாவை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்தனர். அந்த தீர்மான நகலை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போயஸ்கார்டன் சென்று சசிகலாவிடம் வழங்கினார்.

பொதுக்குழு கோரிக்கையை ஏற்று பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சசிகலா சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இன்று மதியம் 12 மணிஅளவில் அதிமுக தலைமை அலுவலகம் வந்த சசிகலா முறைப்படி பொதுச் செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் பிரவு அவரது அண்ணன் ராஜ்குமார் மற்றும் சிவாஜி குடும்பத்தினர் இன்று போயஸ் கார்டன் இல்லம் வந்தனர். அங்கு அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மறைந்த ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக அறிவிக்கப்பட்ட சுதாகரன் சிவாஜி குடும்பத்தில் இருந்து தான் பெண் எடுத்திருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: OneIndia

Author Image
murugan