பிரதமர் மோடியின் பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது: கேஜ்ரிவால் சாடல் !

பிரதமர் மோடியின் பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது: கேஜ்ரிவால் சாடல் !

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி நவம்பர் 8-ந்தேதி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  மேலும், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

இதற்கு பிரதமர் மோடி, 50 நாட்கள் பொறுத்திருங்கள். அதன்பின் பதில் அளிக்கிறேன் என்றார். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று தொலைகாட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது வங்கி செயல்பாடுகள் விரைவில் தீர்க்கப்படும் என்றார். மேலும் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில் மோடியின் பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் மோடியின் பேச்சை நம்புவதை மக்கள் நிறுத்திவிட்டார்கள் என்றும் சர்வதேச அளவில் கேளிக்கை பொருளாக அவர் மாறிவிட்டார் என்றும் சாடியுள்ளார்.

Source: OneIndia

Author Image
murugan