Go to ...

RSS Feed

டூவீலர் ஸ்டாண்டான சிவகாசி பஸ் ஸ்டாண்ட்: இடநெருக்கடியில் பயணிகள் அவதி


சிவகாசி:  சிவகாசி பஸ் ஸ்டாண்டில் டூவீலர்களை நிறுத்துவதால் இடநெருக்கடியில் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிவகாசி பஸ் ஸ்டாண்ட் 2 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் 50க்கும் மேற்பட்ட அரசு நகர பஸ்கள், 30க்கும் மேற்பட்ட அரசு புறநகர் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். வெளியூர் செல்லும் பஸ்களுக்கு தனியாக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பஸ் ஸ்டாண்டிலுள்ள சின்ன சின்ன காலி இடங்களில் பழக்கடை, பெட்டி கடை அமைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பஸ் நின்று செல்லும் இடங்களில் சிலர் டூவீலர்களை நிறுத்தி செல்கின்றனர். பஸ்கள் நிற்க இடம் இல்லாததால் பஸ் ஸ்டாண்டின் மைய பகுதியில் நின்று பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்கின்றன.

பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், டூவீலர்களை அப்புறப்படுத்தவும்  நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பஸ்கள் வெளியே செல்லும் பாதையை ஆக்கிரமித்து டூவீலர்களை நிறத்தி செல்வதால் பஸ்கள் வெளியே செல்ல சிரமப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டில் காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் பயணிகள், பஸ் வரும் வரை அமர்ந்து செல்ல இருக்கை வசதி எதுவும் இல்லை. இதானல் மணிக்கணக்கில் நின்று கொண்டே பஸ்சுக்காக காத்திருந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது. கழிவறை தினமும் சுத்தம் செய்யப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் செயல்பாடின்றி முடங்கி கிடப்பதால் பஸ் ஸ்டாண்டில் எந்தவித அடிப்படை பணிகளும் செய்து தரப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் டூவீலர்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

English summary
In your standana, sivakasi bus stand: overcrowding passengers Awadhi

Sivakasi: sivakasi bus stop due to overcrowding in your passengers miserable inside are becoming

Tags: