Go to ...

RSS Feed

பாஜகவுக்கு அழைப்பை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு!


டெல்லி: கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்கும்படி கோரியுள்ளது.

கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

பெரும்பான்மை பலம் உள்ள தங்களை தவிர்த்து, பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் ஏற்கனவே கூறியிருந்தது.

இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்கும்படி, ஆளுநர் வாஜூபாய் வாலா இன்று இரவு அழைப்பு விடுத்தார். அதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை வலியுறுத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

நாளை காலையில் எடியூரப்பா பதவியேற்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Source: OneIndia

English summary
The case against Congress call for the BJP. The Chief Judge of the Supreme Court petition!

Delhi: BJP to form a Government in Karnataka called the petition in the Supreme Court against the Congress attack