Go to ...

RSS Feed

எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு… காங்கிரஸ் வழக்கு… நள்ளிரவில் விசாரணை நடக்குமா!


டெல்லி: கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்கும்படி கோரியுள்ளது. அதையடுத்து நள்ளிரவில் இதை விசாரிப்பது குறித்து ஆராயப்படுகிறது.

கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

பெரும்பான்மை பலம் உள்ள தங்களை தவிர்த்து, பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் ஏற்கனவே கூறியிருந்தது.

இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்கும்படி, ஆளுநர் வாஜூபாய் வாலா இன்று இரவு அழைப்பு விடுத்தார். அதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

நாளை காலையில் எடியூரப்பா பதவியேற்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சிறிது நேரத்தில் தனது முடிவை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Source: OneIndia

English summary
Governor calls for yediyurappa said. The Congress case. In the middle of the night when the inquiry!

Delhi: BJP to form a Government in Karnataka called the petition in the Supreme Court against the Congress attack