Go to ...
RSS Feed

கோவை கலைமகள் கல்லூரியில் மாணவி உயிரிழந்த விவகாரம்.. போலி சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைது!


For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

ஈரோடு: கோவை கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த விவகாரத்தில் போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கலைமகள் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேரிடர் பயிற்சியின் போது, கோவை நரசிங்கபுரத்தை சேர்ந்த லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தார். மாணவி மறுத்த போதும் இரண்டாவது மாடியில் இருந்து பயிற்சியாளர் தள்ளிவிட்டதால் சன் ஷேடில் அடிப்பட்டு மாணவி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆறுமுகம் அளித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது. அவர் மத்திய, மாநில அரசு ஊழியர் கிடையாது என தெரியவந்தது.

மேலும் மாணவி உயிரிழக்க காரணமான பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் அளித்த ஆவணங்கள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவி உயிரிழந்தது தொடர்பாக, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் மாணவி உயிரிழப்புக்கு காரணமான போலி பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவரை ஈரோடு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Source: OneIndia