Go to ...

RSS Feed

சொத்துத் தகராறில் முதியவர் சரமாரியாக குத்திக் கொலை: சிசிதொலைக்காட்சிகாட்சியால் சிக்கிய அண்ணன் மகன்


கோயம்பத்தூரில் சொத்துப் பிரச்சினையில் பெரியப்பாவை குத்திக் கொன்றுவிட்டு தப்பிச் சென்ற இளைஞர் சிசிதொலைக்காட்சிகேமரா மூலம் சிக்கினார்.

கோவை மாவட்டம் குனியமுத்தூரை அடுத்த கோவை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜமீல் அகமது (64).  குடும்பச் சொத்து தொடர்பான பிரச்சினையில் சகோதரர்களிடையே வழக்கு நடந்துள்ளது. இதில் சமீபத்தில் ஜமீல் அகமதுவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்துள்ளது.

ஐந்து வேளை தொழும் பழக்கம் உள்ள ஜமீல் அகமது நேற்று மதியத் தொழுகையை முடித்துக்கொண்டு வந்தபோது, அவரை யாரோ கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு ரத்தவெள்ளத்தில் புதர் ஓரம் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். சாலையோரம் கிடந்த ஜமீல் அகமதுவைக் கண்ட பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகளுக்குப் புகார் அளித்தனர்.

பின்னர் ஜமீல் அகமதுவை சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். அவரது  உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தியதில் கொலையை யாரும் பார்க்கவில்லை என்று தெரிவித்தனர். காரணம் கொலை நடந்த இடம் ஆளரவமற்ற இடமாக, மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடமாக இருந்ததே.

பின்னர் காவல் துறையினர் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்தபோது அதில் இளைஞர் ஒருவர் சாலையில் தனியாக நடந்துவரும் ஜமீல் அகமதுவைப் பின்னாலிருந்து கத்தியால் குத்துவதும், பின்னர் கீழே விழுந்த அவரை சரமாரியாகக் குத்துவதும் பதிவாகியிருந்தது.

கண்காணிப்புப் பதிவை ஜமீல் அகமதுவின் உறவினர்களிடம் காட்டிய காவல் துறையினர் யார் எனக் கேட்டபோது அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜமீல் அகமதுவை சரமாரியாகக் கத்தியால் குத்துவது அவரது அண்ணன் மகன் ஹாரூண் எனத் தெரியவந்தது. அவரை அடையாளம் காட்டினர்.

காவல் துறையினர் தலைமறைவாக இருந்த ஹாரூணைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், குடும்பச் சொத்தைப் பிரிப்பது தொடர்பான வழக்கில் ஜமீல் அகமதுவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் ஆத்திரமடைந்து கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவித்தார்.

14 இடங்களில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் ஹாரூண். காவல் துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source: The Hindu

Tags: