Press "Enter" to skip to content

வெறிநாய் தொல்லை கட்டுப்படுத்த நாய்களுக்கு கு.க. மையம்: உறையூரில் உருவாகிறது

திருச்சி: திருச்சி மாநகர தெருக்களில்  திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதாகவும், குழந்தைகளை வெறிநாய்கள் கடித்து ரேபீஸ் பாதிப்புக்குள்ளாக்குவதாகவும் புகார்கள் வந்தன.இதை தொடர்ந்து தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து, அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், உறையூர் கோணக்கரைப்பகுதியில் நாய்களுக்கான கருத்தடை மையம் 2,714 சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 100 நாய்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் 10 அறைகளும்,  நோய் பாதித்த 40 நாய்களை தனியாக வைத்து பராமரிக்க 4 அறைகளும் கட்டப்படடு வருகின்றன. வெறி நாய்களை தங்க வைக்க தனிப்பகுதியில் அறை கட்டப்பட்டு வருகிறது.

இதைத் தவிர மருத்துவர்  அறை, அறுவை சிகிச்சை கூடம், இருப்பு அறை,  என அனைத்து வசதிகளுடன் கூடிய கருத்தடை மைய கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பொலிவுறு நகரங்கள், தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகராட்சி இடம் பெற்றுள்ளதை அடுத்து பெரு நகரங்களுக்கு இணையான வளர்ச்சியை நோக்கி அடிப்படை கட்டமைப்புகளை கட்டமைத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக மாநகருக்குள் தெரு நாய்கள் ெதால்லையை கட்டுப்படுத்தவும், வெறிநாய் கடியிலிருந்து சிறார்களை காக்கவும் நாய்க்களுக்கான கருத்தடை மையம் கட்டப்பட்டு வருகிறது. தினமும் 30 நாய்களுக்கு கருத்தடை செய்யும் வகையில் அனைத்து வசதிகளும் உள்ளன. பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளதால் மையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர  அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.