Press "Enter" to skip to content

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு ‘விறுவிறு’

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அரளிக்கோட்டை கிராமத்தில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரளிக்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று இளைஞர்களால் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று அரளிப்பட்டி கண்மாயில் கிராமத்தினர் ஊர்வலமாக வலம் வந்து தொழுவத்தை அடைந்தனர்.

 அங்கு கிராமத்தின் சார்பாக மஞ்சுவிரட்டு காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டு காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »