Press "Enter" to skip to content

மழையில்லாததால் வறண்டது மூல வைகை

வருசநாடு : கடமலை- மயிலை ஒன்றியத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மூல வைகை ஆறு வறண்டு வருகிறது. தேனி மாவட்டம், கடமலை – மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.  தும்மக்குண்டு, முறுக்கோடை, சிங்கராஜபுரம், வருஷநாடு, தங்கம்மாள்புரம், நரியூத்து, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, பாலூத்து, கண்டமனூர் உள்ளிட்ட அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் மூல வைகை ஆற்றில் இருந்து உறைகிணறு அமைத்து மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது வருசநாடு அருகே வெள்ளிமலை, அரசரடி போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அளவு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் வெள்ளிமலை முதல் வருசநாடு ஊராட்சி வரை தற்பொழுது மூலவைகை ஆற்றில்நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. மீதமுள்ள ஊராட்சிகளில் மூலவைகை ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடமலை – மயிலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், எவ்வாறு குடிநீர் வழங்குவது பொதுமக்களுக்கு குடிநீர் பஞ்சத்தை போக்குவது போன்ற பல்வேறு கோணங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றது. மேலும் குடிநீர் பயன்படுத்தும் முறைகள் பற்றியும், குடிநீர் சிக்கனம் பற்றியும் அந்தந்த ஊராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு செய்து வருகிறது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »