Go to ...
RSS Feed

பொங்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன திருத்துறைப்பூண்டியில் கரும்பு, மண்பானைகள் விற்பனை தீவிரம்


திருத்துறைப்பூண்டி : பொங்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் திருத்துறைப்பூண்டியில் கரும்பு., மண்பானைகள் விற்பனை  தீவிரமடைந்துள்ளது.  கஜாபுயல்பாதிப்பால் வாழைத்தார் விலை இருமடங்கு  உயர்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகருக்கு பொங்கல் பண்டிகைக்காக பொருட்கள் வாங்குவதற்கு கிராமப்பகுதியிலிருந்து கடந்த சில தினங்களாக பொதுமக்கள் கூட்டம் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

ஆனால் கடந்த ஆண்டு புதுக்கோட்டை ஆவனம் பகுதியிலிருந்துதான் திருத்துறைப்பூண்டி பகுதிக்கு வாழைத்தார் விற்பனைக்கு வரும் அப்போதைய விலை ஒரு தார் பழத்திற்கு ஏற்ப ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்பட்டது.இந்த ஆண்டு கஜா புயல் காரணமாக ஆவனத்தில் வாழைத்தார் இல்லாததால் தூத்துக்குடியிலிருந்து வாழைத்தார் விற்பனைக்கு வருகிறது.அதுவும் ஆவனத்திலிருந்து வாழைப்பழம் போல் இருக்காது. மேலும் விலை கடுமையாக உயர்ந்து ஒரு தார் ரூ.450 முதல் ரூ.700 வரை இப்போது விற்கப்படுகிறது.இன்னும் சில தினங்களில் இந்த விலை உயரும்.தஞ்சை மாவட்டத்திலிருந்துதான் கரும்பு விற்பனைக்கு வரும் திருக்காட்டுப்பள்ளி போன்ற பகுதிகளில் கஜா புயல் பாதிப்பு இல்லாததால் அங்கிருந்து வரும் கரும்பு கடந்தாண்டு ஒரு கட்டு 10 கரும்பு ரூ.250-க்கு விற்றது.

இந்தாண்டும் அதே விலைக்குதான் விற்கப்படுகிறது.பொங்கல்  பண்டிக்கைக்கு நிறைய பேர் சில்வர் மற்றும் வெங்கல பாத்திரத்தில்தான் பொங்கலிடுவார்கள். இருந்தாலும் பழைய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைப்பதற்காக ஆர்வமாக மண்பானைகளையும் வாங்கி செல்கின்றனர்.இன்னும் இரண்டு தினங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கும் அதனால் போக்குவரத்து நெரிசலில்லாமல் இருப்பதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சந்திரசேகர் விரிவாக செய்துள்ளார்.

Source: Dinakaran

Tags: