Press "Enter" to skip to content

பொன்மலை பணிமனையில் தயாரானது திருச்சி-ஹவுரா தொடர் வண்டிபெட்டிகள் நவீன முறையில் மாற்றம்

திருச்சி, : திருச்சி பொன்மலை தொடர்வண்டித் துறை பணிமனையில் நவீன முறையில் தயாரான ஹவுரா எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிநேற்று திருச்சியிலிருந்து ஹவுராவுக்கு புறப்பட்டுச் சென்றது.
இந்தியாவில் உள்ள தொடர் வண்டிகளில் பழமையான ரயில்கள் மற்றும் அதன் பெட்டிகளை மாற்றி புனரமைத்து இயக்கலாம் என மத்திய தொடர்வண்டித் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நீண்ட தூர பயணங்கள்படி ‘புராஜக்ட் உத்கிறிஸ்ட்’ என்ற பெயரில் 66 எக்ஸ்பிரஸ் ரயிலை மாற்றி புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில், திருச்சியில் இருந்து செவ்வாய், வெள்ளி என வாரம் இருமுறை மேற்குவங்கம் செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12664) தொடர் வண்டிபெட்டிகளை மாற்றி அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது.

சென்னை பெரம்பூர் பணிமனையில் தொடர் வண்டிபெட்டி பணியும், திருச்சி பொன்மலை தொடர்வண்டித் துறை பணிமனையில் உள்கட்டமைப்பு பணியும் நடந்தது.   பொன்மலை தொடர்வண்டித் துறை பணிமனையில் நடந்த உள்கட்டமைப்பு பணியில் தொடர் வண்டிபெட்டிகளில் தரைத்தளம் பிவிசியினால் அமைக்கப்பட்டது. எல்இடி லைட் வசதி, கைபேசி சார்ஜ் வசதி, ஜன்னல் கம்பிகள் ஸ்டெயின்லஸ் ஸ்டீலினால் அமைக்கப்பட்டது. மேலும் தொடர் வண்டிபெட்டியில் உள்ள டாஸ்லெட் பயோ டேங்க் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

 அதுபோல் வழக்கமாக தொடர் வண்டிபெட்டிகளில் உள்ள புளு கலருக்கு பதில் காவி உள்ளிட்ட கலர் என நவீன முறையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தொடர் வண்டிபெட்டியும் ரூ.60 லட்சம் செலவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று புதிதாக மாற்றப்பட்ட 23 பெட்டிகள் (2 முன்பதிவில்லாதது, 14 தூங்கும் வசதி, 5 ஏசி, 2 பேஸ்ட்ரி) கொண்ட தொடர் வண்டிமாலை 4.20 மணிக்கு திருச்சியில் இருந்து ஹவுரா புறப்பட்டு சென்றது. இதனை தொடர்வண்டித் துறை அதிகாரிகள் துவக்கி வைத்து அனுப்பி வைத்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »