Press "Enter" to skip to content

‘கனா’வின் உண்மையான வெற்றி!3 நிமிட வாசிப்புஒரு திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடைவதைக் காட்டிலும் அப்படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வே…

ஒரு திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடைவதைக் காட்டிலும் அப்படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே அதை உருவாக்கும் கலைஞர்களின் எண்ணமாக இருக்கும். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா திரைப்படம் இரண்டிலும் வெற்றியடைந்துள்ளது.

அருண்ராஜா காமராஜ் இயக்கிய முதல் திரைப்படமான கனாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்திலும் நடித்தனர். கிராமப்புற பெண் பல்வேறு தடைகளை கடந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து சாதனை படைப்பதே கனா படத்தின் கதை. இதோடு விவசாயப் பிரச்சினையையும் இப்படம் சேர்த்துக் கூறியது.

டிசம்பர் 21ஆம் தேதி பலத்த போட்டிகளுக்கு இடையே வெளியான இப்படம் குறைந்த வரவு செலவுத் திட்டத்தில் தயாராகி நல்ல லாபத்தை தயாரிப்பாளருக்குப் பெற்றுத்தந்தது.

தற்போது அதைவிட முக்கியமான நிகழ்வு என்னவெனில் கிரிக்கெட் மேல் ஆர்வம் கொண்ட கிராமப்புற பெண்கள் தங்கள் கனாவைத் துரத்த இந்தப் படம் மூலம் உந்தப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் ‘ஜென் நெக்ஸ்ட் கிரிக்கெட் இன்ஸ்டியூட்’ என்ற கிரிக்கெட் பயிற்சி மையத்தை நடத்திவருகிறார்.

இந்த மையத்தின் தலைமை செயலாக்க அதிகாரி சுதர்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் 5 முதல் 6 அழைப்புகள் வருகின்றன. பெற்றோர்கள் தங்கள் 12 – 13 வயது பெண் குழந்தைகளை எமது கிரிக்கெட் அகாடமியில் சேர்ப்பது தொடர்பாக விசாரிக்கின்றனர். கனா திரைப்பட குழுவிற்கு நன்றி. நல்ல கருத்துகள் மக்கள் மத்தியில் கண்டிப்பாக சென்றடையும் என்பதை இது காட்டுகிறது. இப்படம் அவர்களைப் பாதித்துள்ளது. வாழ்த்துகள் சிவகார்த்திகேயன். இது உண்மையான வெற்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »