Press "Enter" to skip to content

24 கிலோ தங்கத்தைக் கடத்திய 2 பெண்கள்!2 நிமிட வாசிப்புசென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான 24 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் ச…

மின்னம்பலம்:24 கிலோ தங்கத்தைக் கடத்திய 2 பெண்கள்!
24 கிலோ தங்கத்தைக் கடத்திய 2 பெண்கள்!

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான 24 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹாங்காங்கில் இருந்து இன்று (ஜனவரி 12) காலை சென்னை வந்தது கதே பசிபிக் விமானம். இந்த விமானத்தின் பயணிகளையும் உடமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இரண்டு பெண்கள் நடந்து வந்த தோராணை அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்களை விசாரித்ததில், இருவரும் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹான்பியுல் ஜங் (26) யுன்யங் கிம் (26) என்பது தெரிய வந்தது. முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால், தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர்களைச் சோதனையிட்டனர் பெண் அதிகாரிகள். சோதனையில் பைஜாமா, ஸ்கார்ட்டுக்கு அடுத்தபடியாக இருவரும் சின்ன (மினி) ஷார்ட்ஸ் அணிந்திருந்தது தெரியவந்தது. அவர்களது சின்ன (மினி) ஷார்ட்ஸின் முன் மற்றும் பின்பக்க பாக்கெட்டுகளில் இருந்து 24 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். இதனுடைய மதிப்பு ரூ.8 கோடியாகும்.

இதைத் தொடர்ந்து, இரண்டு பெண்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

சனி, 12 ஜன 2019

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »