Press "Enter" to skip to content

சரக்கு சேவை: வளர்ச்சி கண்ட துறைமுகங்கள்!3 நிமிட வாசிப்புநடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் இந்தியாவின் முன்னணி துறைமுகங்கள் 3.77 சதவிகித…

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் இந்தியாவின் முன்னணி துறைமுகங்கள் 3.77 சதவிகிதம் கூடுதலான சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளன.

காண்ட்லா, மும்பை, ஜே.என்.பி.டி., மர்முகோவா, கொச்சின், நியூ மங்களூர், சென்னை, காமராஜர், வ.உ.சிதம்பரனார், விசாகப்பட்டினம், பாரதீப் மற்றும் கொல்கத்தா ஆகிய 12 துறைமுகங்களும் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களாகும். இவை நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் மொத்தம் 518.6 மில்லியன் டன் அளவிலான சரக்குகளைக் கையாண்டுள்ளன. இது சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 499.7 மில்லியன் டன் சரக்குகளை விட 3.77 சதவிகிதம் அதிகமாகும்.

அதிகபட்சமாக, காமராஜர் துறைமுகம் 18.38 சதவிகிதம் (சென்ற ஆண்டை விட) கூடுதலான சரக்குகளைக் கையாண்டு முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடர்ந்து கொச்சின் துறைமுகம் 8.92 சதவிகிதமும், கொல்கத்தா துறைமுகம் 8.74 சதவிகிதமும், பாரதீப் துறைமுகம் 8.11 சதவிகிதமும், ஜே.என்.பி.டி. துறைமுகம் 7.39 சதவிகிதமும் கூடுதலான சரக்குகளைக் கையாண்டுள்ளன. அதிக சரக்குகளைக் கையாண்ட துறைமுகமாக காண்ட்லா துறைமுகம் உள்ளது. இத்துறைமுகம் மொத்தம் 84.91 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. பாரதீப் துறைமுகம் 80.43 மில்லியன் டன், ஜே.என்.பி.டி. துறைமுகம் 52.53 மில்லியன் டன், விசாகப்பட்டினம் 49.28 மில்லியன் டன் என்ற அளவில் சரக்குகளைக் கையாண்டுள்ளதாக மத்திய கப்பல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »