Go to ...
RSS Feed

மந்த நிலையில் பயிர் விதைப்பு!2 நிமிட வாசிப்புரபி பருவத்தில் பயிர் விதைப்புப் பரப்பு 30 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது.


மின்னம்பலம்:மந்த நிலையில் பயிர் விதைப்பு!
மந்த நிலையில் பயிர் விதைப்பு!

ரபி பருவத்தில் பயிர் விதைப்புப் பரப்பு 30 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது.

கோதுமை, பருப்பு விதைப்புப் பரப்பு குறைந்ததன் விளைவாக நடப்பு ரபி (அக்டோபர் – மார்ச்) பருவத்தில் ஒட்டுமொத்த விதைப்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மத்திய வேளாண் அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்த வாரம் வரையில் மொத்தம் 581.5 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு மட்டுமே பயிர்கள் விதைக்கப்பட்டுள்ளன. இது சென்ற ஆண்டின் இதே காலம் வரையில் விதைக்கப்பட்ட 610.5 லட்சம் ஹெக்டேர் பரப்பை விட 4.5 சதவிகிதம் குறைவாகும். இதில் கோதுமை விதைப்புப் பரப்பு 300.51 லட்சம் ஹெக்டேரிலிருந்து 294 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இது 2.14 சதவிகிதம் சரிவாகும். மகாராஷ்டிரா, குஜராத், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் கோதுமை குறைவான அளவிலேயே விதைக்கப்பட்டுள்ளது.

அரிசி விதைப்புப் பரப்பு சென்ற ஆண்டை விட 21 சதவிகிதம் குறைந்து 16.57 லட்சம் ஹெக்டேராக உள்ளது. பருப்பு வகைகள் விதைப்பில் 5.73 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் 16.9 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு விதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டில், பருப்பு விதைப்புப் பரப்பு 147.91 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. எண்ணெய் வித்துப் பயிர்களுக்கான விதைப்புப் பரப்பு 78.75 லட்சம் ஹெக்டேரிலிருந்து 77.97 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

சனி, 12 ஜன 2019

Source: Minambalam.com