Press "Enter" to skip to content

மாணவிகளுக்கு வாய்ப்பு கொடுத்த இளையராஜா2 நிமிட வாசிப்புகல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவ…

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இளையராஜா.

அண்மையில் இளையராஜா எத்திராஜ் கல்லூரி, ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன் அவரது இசையில் தாங்கள் பாட விரும்புவதாகவும் அது தங்கள் கனவென்றும் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.

இதன் விளைவாக இரண்டு கல்லூரிகளிலும் பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை வைத்துள்ளார் இளையராஜா. அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளைத் தேர்வு செய்துள்ளார். இந்த ஒன்பது பேரும் இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாகவுள்ளனர்.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »