Press "Enter" to skip to content

நெகிழி (பிளாஸ்டிக்)கை எரித்தால் நடவடிக்கை!2 நிமிட வாசிப்புபோகி பண்டிகையின்போது தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை எரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க…

போகி பண்டிகையின்போது தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை எரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கிண்டியிலுள்ள மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ‘புகையில்லா போகி’ என்ற தலைப்பில் இன்று (ஜனவரி 12) கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆராய்ச்சியாளர்கள், பொது நல அமைப்பினர், அரசுத் துறை அல்லாத சேவை நிறுவனத்தினர் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை எரிப்பதனால் ஏற்படும் தீங்கு, அதைத் தடுக்கும் வழிமுறை குறித்து இதில் பேசப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷம்பு கல்லோலிகர் பேசுகையில், போகி பண்டிகையன்று பொதுமக்கள் தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை எரிக்காமல் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தெரிவித்தார்.

“பண்டிகையன்று, சென்னை முழுவதும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 30 ரோந்துக் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும். பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு அளித்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஷம்பு கல்லோலிகர் எச்சரிக்கை விடுத்தார்.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »