Press "Enter" to skip to content

சிப்ஸ், சாக்லெட் பாக்கெட்களுக்கும் தடை – அமைச்சர் அறிவிப்பு

ஈரோடு: `பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், சாக்லெட் போன்றவைகளுக்கு விரைவில் தடை ஏற்படுத்தப்படும்’  என்று அமைச்சர் கருப்பணன் அறிவித்தார்.சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், ஈரோட்டில் நிருபர்களிடம் ேநற்று கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 14 வகை நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், சாக்லெட் போன்றவைகளுக்கு விரைவில் தடை ஏற்படுத்தப்படும். நெகிழி (பிளாஸ்டிக்)குக்கு மாற்றான பொருட்களை உற்பத்தி செய்ய அரசு பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது. மாநில அளவில் 273 பெரிய நிறுவனங்கள் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்நிறுவனங்கள் மாற்று பொருள் தயாரிப்புக்காக இதுவரை அரசை நாடவில்லை. அவ்வாறு நாடினால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். போகி பண்டிகையை புகையின்றி கொண்டாட, மாசு கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு கருப்பணன் கூறினார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »