Go to ...
RSS Feed

பொங்கலை முன்னிட்டு சென்னை – நெல்லை சுவிதா தொடர் வண்டியில் 2-ம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.5,300


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று இயக்கப்பட்ட சுவிதா சிறப்பு தொடர் வண்டியில் படுக்கை வசதி யுள்ள ஒரு அனுமதிச்சீட்டு ரூ.1,315 ஆகவும், 2-ம் வகுப்பு ஏசியில் ஒரு அனுமதிச்சீட்டு ரூ.5,300 ஆகவும் விற்கப்பட்டன. இதனால் சாதாரண, நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சுவிதா சிறப்பு தொடர் வண்டி2ஏசி, 3ஏசி, படுக்கை வசதி பெட்டிகளில் தலா 20 சதவீதம் என 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்கிடையே, பொங்கலை யொட்டி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று இயக்கப்பட்ட சுவிதா தொடர் வண்டியில் (82611) படுக்கை வசதி யுள்ள ஒரு அனுமதிச்சீட்டு ரூ.1,315, 3-ம் வகுப்பு ஏசியில் ஒரு அனுமதிச்சீட்டு ரூ.3,745, 2-ம் வகுப்பு ஏசியில் ஒரு அனுமதிச்சீட்டு ரூ.5,300 எனவும் வசூலிக்கப்பட்டன. இந்தகட்டணங்கள் வழக்கமாக உள்ளகட்டணத்தில் இருந்து, 3 மடங்குஅதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக திருநெல் வேலிக்குச் செல்லும் விரைவு தொடர் வண்டிகளில் படுக்கை வசதிக்குரூ.385 கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

பயணிகள் பாதிப்புஇதுகுறித்து பயணிகள் சிலர்கூறும்போது, ‘‘பண்டிகை நாட்களில் ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில்கொண்டு சுவிதா போன்றஅதிக கட்டணம் வசூலிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், ஆம்னி பேருந்துகளை விட கட்டணம் அதிகமாக இருக்கிறது. வேறு வழியின்றி கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி மக்கள் குடும்பத்தோடு பயணம் செய்கின்றனர். இதனால், ரயில்பயணத்தை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்’’ என்றனர்.

Source: The Hindu

Tags: