Press "Enter" to skip to content

மயிலை கபாலீஸ்வரர் கோயில் இடத்தில் ரூ.17 கோடியில் திருமண மண்டபம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயி பார்வைகுச் சொந்தமான இடத்தில் ரூ.16 கோடியே 75 லட்சத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மயிலாப்பூர் கபா லீஸ்வரர் கோயிலுக்குச் சொந்த மான 2.447 ஏக்கர் நிலத்தில் தரை தளத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 475 இருக்கைகள் கொண்ட உணவு அருந்தும் இடம், முதல் தளத்தில் 1,000 இருக்கைகள் கொண்ட திருமண நிகழ்ச்சிக்கூடம், 80 இருக்கைகள் கொண்ட முக்கிய பிரமுகர்கள் உணவு அருந்தும் இடம், 14 அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் ரூ.16 கோடியே 75 லட்சம் மதிப்பில் அதிநவீன திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, அருணாச்ச லேஸ்வரர் கோயிலின் உப கோயி லான சோமாசிபாடி பாலசுப்பி ரமணியசுவாமி கோயிலில் 244.94 சதுர மீட்டர் பரப்பில், 50 பேர் உணவு உட்கொள்ளும் வசதியுடன் ரூ.53 லட்சத்தில் அன்னதானக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை முதல்வர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், திருவண்ணாமலை, ஆரணி புதுக்காமூர் புத்திர காமேஸ்வரர் கோயிலில் ரூ.2 கோடியே 50 லட்சத்திலும், வேட்ட வலம் அகத்தீஸ்வரர் கோயிலில் ரூ.1 கோடியே 50 லட்சத்திலும், திரு வாரூர், ஆலங்குடி ஆபத்சகா யேஸ்வரர் கோயிலில் ரூ.6 கோடியே 71 லட்சத்திலும், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ரூ.24 கோடியே 65 லட்சத்திலும் யாத்ரி நிவாஸ் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. மேலும் வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோயிலில் ரூ.1 கோடியே 86 லட்சத்தில் ஓய்வுக்கூடம் கட்டப்பட உள்ளது. இக்கட்டிடங்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட் டினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.பெஞ்சமின், சேவூர் எஸ்.ராமச் சந்திரன், எம்எல்ஏக்கள், தலைமைச் செயலர் கிரிஜா வைத்திய நாதன், அறநிலையத்துறை செய லர் அபூர்வ வர்மா, ஆணையர் தா.கி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »