Press "Enter" to skip to content

ஜல்லிக்கட்டு பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்: காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு

image

ஜல்லிக்கட்டு பாதுகாப்பில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண் டும் என்று காவல் துறை அதிகாரி களுக்கு டிஜிபி உத்தவிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு தமிழகத்தில் மதுரை, திண் டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சேலம் உட்பட பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். பொங்கல் மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளின்போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு இந்த முறை தடை எதுவும் இல்லாததால் புதிதாக பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த இடங்களில் உரிய பாது காப்பு வசதிகள் செய்ய வேண்டும். சிறிய அளவில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இந்த முறை ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதிரீதியிலான மோதல்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். இதில் உளவு பிரிவு காவல் துறையினர் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு, முன்னெச்சரிக்கை தகவல்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாக வழங்கும் பாதுகாப்பை விடவும் இந்தமுறை கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காணவரும் வெளிநாட்டுப் பயணி களுக்குப் பாதுகாப்பு கொடுக்க தனியாக போலீஸாரை நியமிக்க வேண்டும். பார்வையாளர்கள் மாடத்தில் போலீஸாரும் இருக்க வேண்டும். சந்தேக நபர்களையும், மது அருந்தி வரும் நபர்களையும் உடனடியாகப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றுவிட வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளுக்குள் தேவையில்லாத வாகனங்கள் மற்றும் பிரச்சினை ஏற்படுத்தும் நோக்கில் வரும் நபர்களை அனுமதிக்க வேண்டாம் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து உளவுப் பிரிவு அதிகாரிகளும், தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளும் டிஜிபியை சந்தித்து பேசியுள்ளனர்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »