Press "Enter" to skip to content

ம.பி.யில் பசுவை கொன்றதாக 3 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது: சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் அரசு

காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் பசுவைக் கொன்றதாக கூறி 3 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதே மாநிலம் காரோகான் மாவட்டம் கர்ஹாளி கிராமத்தில் சிலர் பசுவைக் கொன்றதாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து  அங்கு காவல் துறையினர் விரைந்து சென்றனர்.

இதனால் பசுவை கொன்ற புகாருக்கு ஆளான 3 பேரும் கிராமத்தை விட்டு தப்பியோடினர். அந்த கிராமத்தில் இருந்து பசுவின் இறைச்சியை காவல் துறையினர் கைபற்றினர். தப்பியோடிய நஸீம், ஷகீல், அஸம் ஆகிய மூன்று பேரையும் தேடி வந்தனர். 3 நாட்களுக்கு பிறகு அவர்களை கைது செய்த மத்திய பிரதேச காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும், அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவை கொன்றதாக பலர் தாக்கப்பட்டதும், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் பெரும் சரச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மீது காங்கிரஸ் கடும் விமர்சனங்களை முன் வைத்தது. தற்போது காங்கிரஸ் அரசும் இதே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டி.ராஜா

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா கூறுகையில் ‘‘காங்கிரஸ் கட்சியும், பாஜக பாதையில் பயணிப்பது வேதனையளிக்கிறது. இதுபற்றி ராகுல் காந்தி தான் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.