Press "Enter" to skip to content

சத்தீஸ்கரில் கடும் மோதல்: 10 நக்ஸலைட்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 நக்ஸலைட்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் தாகிலோட் வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் இணைந்து நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மாத் பகுதியில் பதுங்கியிருந்த நக்ஸலைட் களை பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். இரு தரப்புக் கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சண்டையில், 10 நக்ஸலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் இருந்து 11 துப்பாக்கிகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வனப்பகுதிக்குள் தப்பியோடிய நக்ஸலைட்களை தேடும் பணி தொடர்கிறது.

இதுகுறித்து மாநில டிஜிபி அஸ்வதி கூறியதாவது:

தாகிலோட் வனப்பகுதியில் நக்ஸலைட்கள் பதுங்கியிருப் பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் 200 பாதுகாப்புப் படை வீரர்கள் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

மாத் பகுதியில் சுமார் 50 நக்ஸல்கள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்பு படை வீரர்கள், அவர்களை சுற்றி வளைத்து தாக்கினர். இதில் 10 நக்ஸலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை தரப்பில் உயிரிழப்பு இல்லை. தப்பியோடிய நக்ஸல்களை கண்டுபிடிக்க மற்றொரு சிறப்புக் குழு அனுப்பப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மாநிலத்தின் புதிய முதல்வர் பூபேஷ் பாகல் கடந்த டிசம்பர் 17-ம் தேதி பதவியேற்றார். புதிய ஆட்சியில் நக்ஸலைட்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள் ளப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இதனிடையே கடந்த சில நாட்களாக நக்ஸல்கள் தரப்பில் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டன. அதில், நக்ஸல் பாதிப்பு காரணமாக குக்கிராமங்களில் மூடப்பட்ட பள்ளிகள், சுகாதார நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது. உண்மை நிலவரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்று அரசு மற்றும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் 10 நக்ஸலைட்கள் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முதல்வர் பூபேந்திர பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு நக்ஸலைட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.