Press "Enter" to skip to content

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; 15-ல் தொடங்குகிறார் மோடி

நாட்டின் முதல் ஓட்டுவிசை (ஓட்டுவிசை (எஞ்ஜின்)) இல்லா ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வரும் 15-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

தொடர் வண்டிபெட்டிகளின் கீழ் ஓட்டுவிசை (ஓட்டுவிசை (எஞ்ஜின்)) பொருத்தப்பட்ட புதிய வகை மின்சார தொடர் வண்டிசென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப்-ல் சமீபத்தில் தயாரிக்கப்பட்டது. ‘ தொடர் வண்டி18’ என்று அழைக்கப்பட்ட இந்த தொடர் வண்டிமணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது.

நாட்டின் மிக அதிவேக ரயிலான இதனை டெல்லி – மும்பை ராஜ்தானி வழித்தடத்தில் அதிகாரிகள் சோதித்துப் பார்த்தனர். இந்த ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என தொடர்வண்டித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் பெயர் சூட்டினார்.

இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கிவைத்து உரையாற்ற உள்ளார். 16 பெட்டிகளை கொண்ட இந்த தொடர் வண்டிடெல்லி – வாரணாசி இடையே இயங்கவுள்ளது. தற்போது இந்த வழித்தடத்தில் இயங்கி வரும் சதாப்தி எக்ஸ்பிரஸ் விலக்கிக் கொள்ளப்பட உள்ளது.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.