Press "Enter" to skip to content

காஷ்மீரில் பனிச்சரிவு: 2 பேர் பலி

காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பனிச்சரிவில் சிக்கி இதுவரை 2 பேர் பலியாகினர். 8 பேர் மாயமாகியுள்ளனர் என்றுகாவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில், ”காஷீரில் உள்ள அனந்த்நாக் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் பஷிர் அகமத் குரேஷியின் குடும்பத்தினர் சிக்கிக்கொண்டனர். இதில் 2 பேர் பலியாகினர். இவர்கள் இருவரும் கணவன், மனைவி என்பது தெரியவந்துள்ளது.

8  பேர் மாயமாகியுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மீட்புப் பணி சற்று தாமதமாகி உள்ளது. மாயமனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இப்பகுதியில் ஏராளமான வீடுகள் பனிப்பொழிவின் காரணமாக பாதிப்புக்குள்ளாகின. காஷ்மீரின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதியில் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்ட ஏராளமான பொதுமக்கள் கடந்த சில நாட்களில் மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 24 மணி நேரத்தில் காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.