Go to ...
RSS Feed

தமிழகத்திலும் துப்பாக்கி கலாசாரம்: உயர்நீதிநீதி மன்றம் கிளை எச்சரிக்கை


மதுரை: வட மாநிலங்களில் இருந்த துப்பாக்கி கலாசாரம், தமிழகத்திற்கும் வந்து விட்டது என உயர்நீதிநீதி மன்றம் கிளை எச்சரித்துள்ளது.மதுரை, நாகனாகுளத்தை சேர்ந்த வக்கீல் கார்மேகம், உயர்நீதிநீதி மன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:கடந்தாண்டு குடியரசு தினத்தன்று, சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் 5 கள்ளத்துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் மற்றும் ரூ.4 லட்சம் கள்ள நோட்டுகளுடன் பெரம்பூரை சேர்ந்த பிரதீப் கைது செய்யப்பட்டார். இந்த  வழக்கில் தொடர்புடையதாக கூறி, சென்னை நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த காவல் துறை பரமேஸ்வரன் என்பவரும் கைதானார். இவர்களுக்கு துப்பாக்கிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருப்பது  தெரியவந்துள்ளது. ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்கள் மூலம் சென்ைன, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பலருக்கு துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக  சட்டவிரோத துப்பாக்கி விற்பனை மற்றும் கள்ளநோட்டு மாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

தமிழக போலீசாரின் விசாரணையில், தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வாய்ப்பில்லை. நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பந்தப்பட்டது என்பதாலும், நாடு முழுவதும் பலருக்கும் தொடர்பிருக்கலாம்  என்பதால் வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் சிபிஐக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி உபயோகம் அதிகரித்துள்ளது. கூலிப்படையினர் துப்பாக்கிகளை  பயன்படுத்துகின்றனர்’’ என்றார்.தமிழக அரசு தரப்பில், இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘வட மாநிலங்களில் மட்டுமே இருந்த துப்பாக்கி கலாசாரம் தற்போது தமிழகத்திற்கும் வந்துவிட்டது. இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் அமைதியின்மை பாதிக்கும். இந்த  வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. இன்று வரை மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாததது அவர்களின் அலட்சியத்தை காட்டுகிறது. இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது.இறுதியாக மத்திய அரசு தரப்புக்கு அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் என்ஐஏ, சிபிஐ மற்றும் மத்திய உள்துறை சார்பில் பதில் மனு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட மத்திய அரசு அதிகாரிகள் ஆஜராகுமாறு  சம்மன் அனுப்ப நேரிடும் என எச்சரிக்கை விடுத்ததோடு, விசாரணையை பிப்.22க்கு தள்ளி வைத்தனர்.

Source: Dinakaran

Tags: