Press "Enter" to skip to content

குட்கா வழக்கில் சிக்கிய காக்கிக்கு நற்சான்று

சுதந்திர தினம், குடியரசு தினங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளை நற்சான்று கொடுத்து கௌரவிப்பது வழக்கம். மாவட்ட ஆட்சியர்  கையால் நற்சான்று வழங்குகிறோம் என்றால் அதற்கு அவ்வளவு நற்பெயர் இருக்கும். ஆனால் சமீப காலமாக இதை சம்பிரதாயமாக அதிகாரிகள் மாற்றி விட்டனர். முன்பெல்லாம் மாவட்டத்தில் 10 அல்லது 20 பேருக்கு தான் நற்சான்று கிடைக்கும். தற்போது நூற்றுக்கணக்கில் நற்சான்றை அள்ளி வழங்குகின்றனர். இதனால் அதற்கு ‘என்ன தான் தகுதி’  என்பது போலாகி விட்டது.சமீபத்தில் முத்து கொழிக்கும் மாவட்டத்தில் காவல் துறை துறையில் சிறப்பாக பணியாற்றிய டிஎஸ்பி முதல் எஸ்பி அலுவலக ஊழியர்கள் வரை என ‘தேர்ந்ெதடுத்து’ 43 பேருக்கு நற்சான்றை  வாரி வழங்கினர். இதில் வாங்குதல்லிகள், அதிகாரிகளை காக்கா பிடிப்பவர்கள் தான் அதிகம் என்கின்றனர் நேர்மையான காவல் துறையினர். அது மட்டுமல்லாது சமீபத்தில் குட்கா வழக்கில் டிஜிபியுடன்  சேர்ந்து சிக்கி ரெய்டு நடவடிக்கைக்கு ஆளான ஆய்வாளர் ஒருவருக்கும் ‘இந்தா பிடி நற்சான்று’ என அவரது மெச்சத் தகுந்த பணிக்காக நற்சான்று வழங்கப்பட்டதாம். அந்த கலெக்டருக்கு  இந்த விஷயம் தெரியுமா என கேட்கின்றனர் சக காவல் துறை அதிகாரிகள்.

மல்லுக்கட்டு…! ஜெயிப்பது யாரு…?
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலந்துகொள்ள அந்தியூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன் வந்தார்.  அங்கு, ஈரோடு எஸ்.பி. சக்திகணேசன் இருந்தார். அவரிடம் பேசிய எம்.எல்.ஏ., ‘’ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் எனது நண்பர் கதிரவன் மீது நீங்கள் வேண்டுமென்றே வழக்கு போட்டு,  விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்வது ஏன்…? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த எஸ்.பி., ‘’தப்பு செஞ்சா… யாராக இருந்தாலும் வழக்கு பதிவுசெய்வதுதான் நடைமுறை…’’  என்றார். உடனே, கடுப்பாகிப்போன எம்எல்ஏ., ‘’எனது சிபாரிசை நீங்கள் மதிப்பதில்லை… இதன் விளைவை விரைவில் சந்திக்க நேரிடும்…’’ என்றார். உடனே, எஸ்.பி., ‘’நான் அதைப்பற்றி  கவலைப்பட மாட்டேன்.. தப்பு செய்தால், தண்டனை அனுபவிக்கனும்….’’ என்றார். இந்த பதிலை கேட்டதும் கோபித்துக்கொண்ட எம்எல்ஏ., அரங்கில் இருந்து வெளியேறினார். அப்போது, அங்கு  வந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர், எம்எல்ஏ.வை சமாதானம் செய்து, அமர வைத்தனர். ஆனாலும், அவர், எஸ்.பி.யை பார்த்து முறைத்துக்கொண்டே இருந்தார். இந்த  மல்லுக்கட்டு எங்கே போய் முடியுமோ… ஜெயிக்கப்போவது யாரோ….? என அரங்கில் இருந்தவர்கள் கமாண்ட் அடித்தனர்.

கையெழுத்து போட தெரியாத கைதி பெயரில் பெட்டிஷன் மர்மம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் கிளைச்சிறையில் பரபரப்புகளுக்கு எப்ேபாதும் பஞ்சமே இல்லை. அந்த வகையில் புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கு, கையெழுத்து போட தெரியாத கைதியின்  பெயரில் வந்த ஒரு பெட்டிஷன். இங்கே மணல் கடத்தல் மாபியாக்கள், ஆந்திர, கார்நாடக மாநில விஐபி கைதிகள் சிலரும் இருக்காங்களாம். அவர்களை பார்க்க வரும் உறவினர்களிடம்  கலெக்‌ஷன் களைகட்டும். இந்த நிலையில், தன்னை பார்க்க வந்த உறவினர்களிடம் கலெக்‌ஷன் செய்ததாக உயரதிகாரி மீது புகார் தெரிவித்து விஜிலென்சுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் ஒரு  ைகதி. அவர் அனுப்பிய கடிதத்தில் இருந்த அட்ரசுக்கு ேபான விஜிெலென்ஸ், என்கொயரி நடத்தியிருக்காங்க. அப்ேபாது அந்த கைதி, மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் போகாதவர் என்பது  ெதரிஞ்சிருக்கு. அதே சூட்டோடு கைதியிடமும் விசாரித்ததில், நான் அப்படி ஒரு பெட்டிஷனே போடலை என்று கலங்கினாராம். இதனால் அதிர்ந்து போன விஜிலென்ஸ், அதிரடி விசாரணை  நடத்தியதில் திடுக்கிடும் தகவல் கிடைச்சிருக்காம். உயரதிகாரியை இங்கிருந்து கிளப்பிவிட்டால் பொறுப்பு அதிகாரியாகலாம். அதோடு ெமாத்த கலெக்‌ஷனும் நம்ம கண்ட்ரோலுக்கு வரும் என்ற  மைன்ட் செட்டில் வலம்வரும் ஹெட்சீப் வார்டன் ஒருவர்தான், இந்த பெட்டிஷனை ைகதியின் பெயரில் போட்டிருக்காராம். இதனால் அவர் விஜிலென்ஸ் வளையத்தில் சீக்கிரம் வருவார் என்ற  பரபரப்பு தொற்றியிருக்காம். இது ஒருபுறமிருக்க, ஹெட்சீப் வார்டனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் விஜிலென்ஸ் நண்பர் ஒருவர், இந்த விவகாரத்தை திசை திருப்புவதற்கான  முயற்சிகளில் தீவிரம் காட்டுகிறார் என்ற புதிய சர்ச்சையும் கூடவே கிளம்பியிருக்காம்.

பெண் டிஎஸ்பி பெயரில் பணம் குவிக்கும் காக்கிகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உயர் காவல் துறை அதிகாரியாக இருந்த குருவானவர் நடத்திய வசூல் வேட்டை ஊரறிந்த விஷயம். இது குறித்து அத்துறையில் பணியாற்றும் நல்ல  காவல் துறையினர் தொடர்ந்து அனுப்பிய புகாரின் பேரில் குருவானவர் அறந்தாங்கியில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக வந்துள்ள குருப்-1 பெண் அதிகாரி, நேர்மையானவர் என போலீசாரால் கூறப்படுகிறார். அத்தகைய நல்ல அதிகாரி சமீபத்தில் ஆவுடையார் கோவில் பகுதியில் அனுமதி பெறாத  டாஸ்மாக் பார்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு 2 பேரை கைது செய்தார். அதன் பிறகு ஏனோ அவர் அறந்தாங்கியில் அனுமதி பெறாதமதுபானக்கடைளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை.  இதற்கு காரணம் ஏற்கனவே குருவானவரிடம் பணிபுரிந்த காவல் துறையினர் பெண் அதிகாரியின் கீழ் வேலை பார்ப்பதால் அறந்தாங்கியில் நடக்கும் சட்டவிரோத மது விற்பனையை அதிகாரியிடம்  மறைத்து விடுகின்றனர். மேலும் அவர்கள் பெண் அதிகாரி பணம் வாங்காத நிலையில் அவர் பெயரை பயன்படுத்தி, குருவானவருக்கு சென்று வந்த வருமானத்தை பெற்று தங்களின் வங்கியில்  குவித்து வருகின்றனர். இது அந்த பெண் அதிகாரியின் கவனத்துக்கு இதுவரை செல்லவில்லை. செல்லவில்லையா அல்லது பெயருக்கு ஒரு ரைடு என செய்து விட்டுவிட்டாரா என்பது தான்  வேதனை என சக காவல் துறையினர் குமுறுகின்றனர். மேலும் பொங்கல் விடுமுறை நாள்களில் மது விற்க ₹4 லட்சம் பேரம் பேசி வாங்கப்பட்டுள்ளது கூடுதல் தகவல்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.