Press "Enter" to skip to content

விபத்தில் மூளைச்சாவு … வாலிபரின் உடல் உறுப்புகள் 3 பேருக்கு தானம்

ராமநாதபுரம்,: ராமநாதபுரம் மாவட்டம்,  பனையூர் கிராமத்தை சேர்ந்தவர்  ராமதாஸ். கொத்தனார். இவரது மகன்  விக்னேஸ்வரன்(21). தனியார் கான்ட்ராக்டரிடம் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். கடந்த 1ம் தேதி ராமநாதபுரம் அருகே பாப்பாகுடி பகுதியில் சாலைப்பணிகளை முடித்து விட்டு இரவு 9 மணியளவில் டூவீலரில் திரும்பி கொண்டிருந்தார். மாயவரம் கிராமம் அருகே எதிரே சைக்கிளில் வந்த நபருக்காக பிரேக் பிடித்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார்.  மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஸ்வரனுக்கு கடந்த 8ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடலில் இருந்து கண்கள், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள்  பெற்றோர் விருப்பத்தின்படி தானமாக பெறப்பட்டு, 3 பேருக்கு பொருத்தப்பட்டது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.