Press "Enter" to skip to content

மாநகராட்சி வரவு செலவுத் திட்டம் பிப்ரவரி இறுதியில் தாக்கல்: திடக்கழிவு மேலாண்மைத் துறைக்கு அதிக நிதி ஒதுக்க திட்டம்

சென்னை மாநகராட்சி வரவு செலவுத் திட்டம்டை இம்மாத இறுதியில் தாக்கல் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி 426 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளது. இது நிர்வாகரீதியாக 15 மண்டலங்கள், 200 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 17 லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றன. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து தினமும் 5 ஆயிரத்து 200 டன் கழிவு பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. அவற்றை அகற்றி, குப்பைக் கிடங்குகளில் சேர்ப்பது வரை யிலான பணியில் சுமார் 19 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சியிலேயே மிகப்பெரிய துறையாக திடக்கழிவு மேலாண்மைத் துறை செயல்பட்டு வருகிறது.

மாநகராட்சி சார்பில் 281 பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் 83 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் 387 கிமீ நீளத்தில் பேருந்து சாலைகள், 5 ஆயிரத்து 623 கி.மீ. நீள உட்புற சாலை, 1,292 கி.மீ. நீள சிமென்ட் சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. இது மட்டுமல்லாது 1,800 கி.மீ. நீளத்துக்கும் அதிகமான மழைநீர் வடிகாலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இப்பணிகளை மேற்கொள்வதற்கான மாநகராட்சி வரவு செலவுத் திட்டம் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் அறிவிப்புகள் வரவுள்ள நிலை யில் இம்மாதமே வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “2018-19 நிதியாண்டில் ரூ.3 ஆயிரத்து 269 கோடிக்கும், 2017-18 நிதி யாண்டில் ரூ.3 ஆயிரத்து 158 கோடிக்கும் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2019-20 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. திடக்கழிவு மேலாண்மைத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட உள்ளது” என்றனர்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.