Press "Enter" to skip to content

தொடர் வண்டிபயணிகள் தங்கள் பாதுகாப்புக்கு ஜிஆர்பி செயலியை பயன்படுத்தலாம்: ஏடிஜிபி அறிவுரை

கடலூர்: தமிழக தொடர்வண்டித் துறை காவல்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு நேற்று கடலூர் முதுநகர் தொடர்வண்டித் துறை காவல்நிலையத்திற்கு  திடீரென  வருகை தந்தார். அங்கு  காவல் நிலைய பதிவேடுகளை பார்வையிட்ட அவர் பாதுகாப்பு பணிகள் குறித்தும் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் மென்மேலும் முனைப்புடன்  பணியாற்றுமாறு தொடர்வண்டித் துறை போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொடர் வண்டிநிலையங்களில் உடமைகள் திருட்டுபோனாலோ அல்லது குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டாலோ உடனடியாக தொடர் வண்டிநிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். அது குறித்து வழக்கு பதிவு செய்து  நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிமாநில தொடர் வண்டிநிலையங்களில் பொருட்கள் திருட்டு போய் பாதிக்கப்பட்டவர்கள், குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களும் புகார் அளிக்கலாம்.  உரிய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அது போல் தொடர் வண்டிபயணிகள் தங்கள் பாதுகாப்புக்காக ஜி.ஆர்.பி ஆப்பை(செயலியை) பயன்படுத்தலாம்.  உடனடி பாதுகாப்பு அவர்களுக்கு கிடைக்கும். தொடர் வண்டிநிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.  தொடர்வண்டித் துறை ஆய்வாளர்(பொறுப்பு) கேதரின் சுஜாதா மற்றும் தொடர்வண்டித் துறை காவல் துறையினர் உடனிருந்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.