Press "Enter" to skip to content

மோடியை சந்திக்க 4 மணி நேரம் காத்திருந்த தம்பிதுரை

கோவை: திருப்பூரில்  நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி  கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னதாக அவர்  விஜயவாடாவில் இருந்து தனி  விமானத்தில் மதியம் 2.35 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தார்.பிரதமரை  வரவேற்க 2 மணியளவில் கோவை விமான நிலையத்திற்கு  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வந்திருந்தார். பின்னர், அங்கிருந்து 2.50  மணியளவில் உலங்கூர்தி  மூலம் மோடி திருப்பூர் சென்றார். பிரதமர் புறப்பட்டதும் அரசு  அதிகாரிகளும் விமான நிலையத்தில் இருந்து கிளம்பினர். ஆனால்,  துணை சபாநாயகர் தம்பிதுரை வெளியே வரவில்லை. காத்திருப்பு அறையிலேயே இருந்தார்.

பின்னர், திருப்பூர்  நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை 5 மணியளவில் உலங்கூர்தி மூலம் பிரதமர்  மீண்டும் கோவை விமான நிலையம் வந்தார். அப்போது தனி  அறையில் கவர்னருடன் 8 நிமிடம்  பேச்சு நடத்தினார். பின்னர், அறையில் இருந்து வெளியேறி 5.15  மணியளவில் பிரதமர் மோடி தனி விமானத்துக்கு சென்றார்.  அவரை தம்பிதுரை,  அமைச்சர்கள் வேலுமணி மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழியனுப்பி  வைத்தனர்.  5.45 மணியளவில் அதாவது சுமார் 4 மணி  நேரத்திற்கு பிறகு அங்கிருந்து  தம்பிதுரை புறப்பட்டு சென்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.