Press "Enter" to skip to content

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று குடமுழுக்கு

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று காலை குடமுழுக்கு நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் சுற்றுக் கோயில்களில் ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோழர் காலத்தில் இருந்ததுபோன்று, பழமையை மீட்டெடுக்கும் வகையில் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

9 சுற்றுக் கோயில்களுக்கு கடந்த ஜன.27-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பூர்வாங்க பூஜைகள் கடந்த 3-ம் தேதி தொடங்கின. இன்று (பிப்.11) காலையுடன் 8 கால யாக பூஜைகள் நிறைவு பெற்று, காலை 9.10 மணிக்கு மேல் 10.10 மணிக்குள் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வர சுவாமி,நீலோத்பாலாம்பிகா சமேத நகவிடங்க செண்பக தியாகராஜ சுவாமி, சனீஸ்வர பகவான் ஆகிய பிரதான மூர்த்திகள், பரிவார தெய்வங்கள் மற்றும் ராஜகோபுரத்துக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது.

இதில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். 500 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடமுழுக்கு நடைபெறும்போது பக்தர்கள் அனைவர் மீதும் புனித நீர் தெளிக்கும் வகையில் விசேஷ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான (கோயில்கள்) ஏ.விக்ரந்த் ராஜா தெரிவித்தார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »