Go to ...
RSS Feed

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை


image

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்களுடன் மக்கள் நீதி மய்யம்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கடந்த 5, 6-ம் தேதிகளில் பொள்ளாச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் 11 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட பொறுப்பாளர் களுக்கான களப்பணிகள் குறித்த மதிப்பாய்வு கூட்டத்தை நடத்தினார். இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை,திருவள்ளூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறுவிஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசனிடம் மக்கள்நீதி மய்யத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘‘அவரது அழைப்பு குறித்து இங்கு எப்படி பதில் கூற முடியும்? அவரிடம் பதில் கூறிக் கொள்கிறேன்’’ என்றார்.

Source: The Hindu

Tags: