Go to ...
RSS Feed

போலி பண இயந்திரம் அட்டை தயாரித்து பண மோசடி; ஜார்க்கண்டை சேர்ந்த 2 பேர் கைது: போலீஸ் பிடியில் தப்பிய மேலும் ஒருவருக்கு வலை


போலி பண இயந்திரம் அட்டைகளைத் தயார் செய்து அதன் மூலம் லட்சக்கணக்கான பணம் மோசடி செய்ததாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை கொல்கத்தா காவல் துறையினர் சென்னையில் கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஸ்கிம்மர் கருவி மூலம் வாடிக்கையாளர் களின் வங்கி ரகசிய எண்களைத் திருடி, போலி பண இயந்திரம் அட்டை தயாரித்து அதில் சம்பந்தப்பட்ட எண்ணைப் பதிவு செய்து லட்சக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்டது.

சென்னையில் இதுபோன்று ஏராளமான வாடிக்கையாளர்கள் பணத்தைப் பறி கொடுத்தனர். இதுதொடர்பாக சென்னை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வடமாநில கும்பலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருப்பினும் ஆங்காங்கே இதுபோல் மோசடிகள் நடந்து வருகின்றன.

போலி பண இயந்திரம் அட்டைகளைத் தயார் செய்து கைவரிசை காட்டும் வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று சென்னையில் தங்கி கைவரிசை காட்டிவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து காவல் துறையினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்தசைபர் கிரைம் காவல் துறையினர் நேற்று முன்தினம்இரவு சென்னை வந்தனர். திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் புகுந்து அங்கு பதுங்கி இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜயகுமார் மண்டல், ஜிகேந்தர் குமார் மண்டல், பாஸ்கர் குமார் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.

இவர்கள் 3 பேரும் கொல்கத்தாவில் கைவரிசை காட்டிவிட்டு சென்னைக்குத் தப்பி வந்ததாகவும், அவர்களைக் கைது செய்து கொல்கத்தா அழைத்துச் செல்ல உள்ளதாகவும் கொல்கத்தா காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து ரூ.25 லட்சம் மற்றும் 21 போலி பண இயந்திரம் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 3 பேரும் சென்னையில் யாரிடத்திலாவது இதுபோல் கைவரிசை காட்டியுள்ளார்களா என்ற கோணத்தில் சென்னை போலீஸாரும் விசாரணை நடத்தினர். ஒருவர் தப்பி ஓட்டம்இந்நிலையில் விசாரணையின்போது சிறுநீர் கழிப்பதாக கூறி வெளியே சென்ற பாஸ்கர் குமார் தப்பிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட மற்ற இருவரையும் கொல்கத்தா போலீஸார் அழைத்து சென்றனர்.

Source: The Hindu

Tags: