Press "Enter" to skip to content

காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவினர் பிரதமர் மோடிக்கு ரூ.17 மணியார்டர் அனுப்பி போராட்டம்!

கோவை: மத்திய அரசை கண்டித்தது பிரதமர் மோடிக்கு 17 ரூபாய் அனுப்பும் போராட்டத்தை கோயம்புத்தூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். சிறு, குறு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி அறிவித்திருப்பதை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசு வழங்கும் இந்த தொகை ஏமாற்று வேலை என்று மக்களுக்கு உணர்த்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவினர் தெரிவித்தனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாய பிரிவு சார்பில் சென்ஞ்சியில் மோடிக்கு 17 ரூபாய் மணியார்டர் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளை புறக்கணிக்கும் வகையிலான மத்திய அரசின் அறிவிப்பு  மிகவும் கண்டிக்கத்தக்கது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் விவசாயிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 10,000 ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.