Press "Enter" to skip to content

நான் வெள்ளை பன்றியா… எவ்ளோ அழகு பாருங்க!

நான் வெள்ளை பன்றியா... எவ்ளோ அழகு பாருங்க!

2/11/2019 5:26:04 PM

ஹரியானாவை சேர்ந்த பாயல் ராஜ்புத் வடமாநிலத்திலிருந்து வந்த நடிகைகள் வரிசையில் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஏஞ்சல், இருவர் உள்ளம் படங்களில் தற்போது நடித்துவரும் பாயல் ஏற்கனவே தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 படத்தில் துணிச்சலாக படுக்கை அறை காட்சி, லிப் டு லிப் முத்தக்காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த ஆண்டில் பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக இவர் நடித்த படம் வெளியானபோது சில ரசிகர்கள் அவரை பன்றியோடு ஒப்பிட்டு நக்கலடித்து கமென்ட் வெளியிட்டார்கள். அதுபற்றி கவலைப்படாமல் பொறுமை காத்து வந்தார். தற்போது பிரபல நடிகைகள் வரிசையில் இடம் பிடித்திருப்பதையடுத்து விமர்சர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ‘பலரும் எனது அழகை வர்ணித்து இப்போது கமென்ட் போடுகிறார்கள்.

ஆனால் ஆரம்ப கட்டத்தில் வெள்ளை பன்றிபோல் இருப்பதாக என்னை நக்கலடித்தார்கள். அதில் எனக்கு வருத்தமில்லை. இதோ பாருங்கள் அழகான வெள்ளை பன்றியோடு நான் இருக்கிறேன். நானும் அதுவும் எவ்வளவு அழகாக இருக்கிறோம் பாருங்க…’ என்று தன்னை விமர்சித்தவர்களுக்கு நெத்தியடியாக பதில் அளித்திருக்கிறார். வெள்ளைப் பன்றியின் வாயைப்போல தனது முகத்தை அழகுகாட்டி அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »