Press "Enter" to skip to content

உணவா இது? விண்மீன் ஹோட்டல் ஊழியர்களுக்கு அடி உதை: கோட், சூட் அணிந்த திருமண வீட்டார் ரணகளம்

திருமணம் என்பது மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு, ஆனால் புதுடெல்லியில் நடந்த சம்பவம் இதற்கு நேர் எதிரானது. திருமண விடுதியாக இருந்த நட்சத்திர விடுதி கடைசியில் ரத்தக்களறியாகியதில் மணவீட்டார், விடுதி ஊழியர்கள் காயமடைந்ததில் போய் முடிந்தது.

தலைநகர் டெல்லியின் ஜனக்புரியில் உள்ள பிகாடிலி நட்சத்திர விடுதியில் இந்த கொடுஞ்சம்பவம் நடந்துள்ளது. அதாவது திருமண உணவு விருந்தில் சுவை மாறுபாடு ஏற்பட விருந்தாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர். ஆனால் விடுதி மேலாளர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்தால் சுமுகமாக முடிய வேண்டிய ஒன்று பெரிய தகராறாக உருமாறியது.

ஆனால் கோபாவேசமடைந்த விருந்தாளிகளில் சிலர் தங்கள் வலுவை உடல் ரீதியாகக் காட்டி விடுதி ஊழியரைச் சரமாரியாகத் தாக்கினர். மரச்சாமான்கள், பிற விடுதியின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன, அடித்து நொறுக்கப்பட்டன, தடுத்த ஊழியர்களுக்கும் அடி உதை.

கோட் சூட் அணிந்த பெரிய இடத்துப் பிள்ளைகள் அசிங்கமாக கீழ் மகன் (ரவுடி)கள் போல் தாக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மணவீட்டார் குடும்பத்தினர் விகாஸ்புரி மற்றும் உத்தம் நகரைச் சேர்ந்தவர்கள், இருவீட்டாரும் இந்த வன்முறையில் ஈடுபட்டதையடுத்து இருவீட்டார் தரப்பிலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.