Press "Enter" to skip to content

தொடர் லஞ்சப்புகார்; டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை: ரூ.2.40 லட்சம் பணம் பறிமுதல்

தொடர் லஞ்சப்புகார் வந்ததை அடுத்து சென்னை டாஸ்மாக் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ரூ.2.40 ரொக்கப்பணத்தை கைப்பற்றினர்.

சென்னை டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகம் அண்ணா சாலை எல்.எல்.ஏ கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு டாஸ்மாக் சென்னை முதுநிலை பிராந்திய முதுநிலை மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன்  மேலாளராக முத்துகுமாரசாமி  பணியாற்றுகிறார். சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களின் 7 கோட்டங்கள் இவருக்கு கீழ் வருகிறது.

பணிமாறுதல், பணிநியமனம், பார் லீஸ் ஒதுக்குவது  உள்ளிட்ட பல்வேறு  பணிகளுக்கு பெருமளவு லஞ்சம் கைமாறுவதாக தொடர்  புகார் எழுந்தது. குறிப்பாக முதுநிலை மேலாளர் முத்துகுமாரசாமி மீது தொடர்ந்து லஞ்ச புகார்கள் வந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் இன்று மதியம்  2 மணி அளவில் இந்த அலுவலகத்தில் புகுந்து, அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் . டிஎஸ்பி சங்கர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர்  இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

முத்துகுமாரசாமி அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ. 2.4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் முதுநிலை பிராந்திய மேலாளர் முத்துகுமரசாமியிடம் விசாரணை நடத்தினர்.

2 மணிக்கு துவங்கிய சோதனை மாலை 7 மணி அளவில் நிறைவுப்பெற்றது. தொடர்ந்து விசாரணையும் நடந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதற்கு முன்னர் இதே பொறுப்பில் பணியிலிருந்த முதுநிலை மேலாளர் குணசேகரன் பணி மாறுதலுக்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரால் பிடிக்கப்பட்டார். அதன் பின்னர் அந்த இடத்திற்கு முத்துகுமாரசாமி வந்தார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.