Press "Enter" to skip to content

துப்பாக்கிச்சூட்டில் மகன் காயம் தூத்துக்குடி கலெக்டரிடம் தாய் கோரிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்  அடைந்த வாலிபரின் அறுவை சிகிச்சைக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என அவரது தாய் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தார். தூத்துக்குடி,  திருச்செந்தூர் ரோடு கருணாநிதி நகரைச் சேர்ந்த பிரம்மசக்தி என்பவர்  கலெக்டரிடம் அளித்துள்ள மனு: தூத்துக்குடியில்  கடந்த மே 22ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் வேலைக்கு சென்றிருந்த எனது  மகன் விஜயகுமாரின் (25), வலது காலில் குண்டு பாய்ந்த போதும் மயிரிழையில் உயிர்  பிழைத்தார். அவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையைத் தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடை எலும்பு  இன்னும் சேராததால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே கணவனை இழந்து நான் வறுமையில் தவிக்கிறேன். எனவே, அரசு  உறுதியளித்தபடி எனது மகனின் சிகிச்சைக்கு உரிய உதவி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.