Press "Enter" to skip to content

பவானிசாகர் அருகே பஸ்சை வழிமறித்த யானை கூட்டம்: பயணிகள் அலறல்

சத்தியமங்கலம்:  பவானிசாகரில் இருந்து காராச்சிக்கொரை வழியாக தெங்குமரஹாடா கிராமத்துக்கு செல்ல அடர்ந்த வனப்பகுதியில் 25 கி.மீ., தூரம் பயணிக்க  வேண்டும். இதற்கு 2 அரசுபேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பவானிசாகரில் இருந்து அரசு பஸ்  தெங்குமரஹாடா செல்வதற்காக காராச்சிக்கொரை வன சோதனைச்சாவடியை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது வனச்சாலையின் நடுவில் யானைகள்  கூட்டம் நின்றிருந்தன. இதை பார்த்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். யானைகள் பஸ்சை நோக்கி ஓடி வந்ததால், பயணிகள் அலறினர். யானைகள் பஸ்சை  வழிமறித்து நின்று கொண்டே இருந்ததால், பயணிகள் அமைதியாக இருந்தனர். சுமார் ஐந்து நிமிடம் நின்றிருந்த யானைக்கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது.  இதையடுத்து பஸ் புறப்பட்டு சென்றது. யானைகள் பஸ்சை வழிமறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.