Go to ...
RSS Feed

‘அம்மா’ மினரல் வாட்டர் விற்பனை உயர்வு


சேலம்:தமி­ழ­கத்­தில் கோடை காலம் துவங்­கு­வதை குறிக்­கும் வகை­யில், வெயி­லின் தாக்­கம் அதி­க­ரிக்க துவங்கி உள்­ள­தால், ‘அம்மா’ மின­ரல் வாட்­டர் பாட்­டில்­களின் விற்­பனை சூடு பிடித்­துள்­ளது.
விரைவு போக்­கு­வ­ரத்­துக் கழக கட்­டுப்­பாட்­டில், கும்­மி­டிப்­பூண்­டி­யில் உள்ள, சாலை போக்­கு­வ­ரத்து நிறு­வ­னத்­தின் சார்­பில், தின­மும், 3 லட்­சம் பாட்­டில்­கள் உற்­பத்தி செய்­யப்­பட்டு, சென்­னை­யில் இருந்து, பிற பகு­தி­க­ளுக்கு வினி­யோ­கிக்­கப்­ப­டு­கிறது.
கடந்த ஜன­வரி வரை, காலை, 8:00 மணி வரை, பனிப்­பொ­ழி­வின் தாக்­கம் இருந்­த­தால், அம்மா மின­ரல் வாட்­டர் பாட்­டில்­களின் விற்­பனை மந்த நிலை­யில் இருந்­தது. கடந்த மாதம் வரை, தின­சரி, 1.10 லட்­சம் பாட்­டில்­கள் விற்­ப­னை­யா­கின.
பிப்­ர­வ­ரி­யில், காலை, இரவு நேரங்­களில் பனிப்­பொ­ழி­வின் தாக்­கம் குறைந்­த­தோடு, வெயி­லின் தாக்­கம் அதி­க­ரித்­துள்­ளது. சுட்­டெ­ரிக்­கும் வெயி­லின் தாக்­கம் சூடு பிடித்­துள்­ள­தால், மின­ரல் வாட்­டர் பாட்­டில்­களின் விற்­ப­னை­யும் சூடு பிடித்­துள்­ளது.
பிப்., 5ல், 1.30 லட்­சம் பாட்­டில்­க­ளாக உயர்ந்த விற்­பனை, பிப்., 9ல், 1.95 லட்­ச­மாக அதிகரித்­துள்­ளது. மே மாதத்­தில் அக்னி நட்­சத்­தி­ரத்­தின் போது, தட்­டுப்­பாடு ஏற்­ப­டா­மல் இருக்க, விற்­ப­னைக்கு தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை, அதி­கா­ரி­கள் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

Source: dinamalar