Press "Enter" to skip to content

எண்ணெய் சுத்திகரிப்பில் முதலீடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆர்வம்

கிரேட்டர் நொய்டா:‘‘இந்­தி­யா­வில் கச்சா எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு மற்­றும் பெட்­ரோ­லிய ரசா­யன திட்­டங்­களில் முத­லீடு செய்ய ஆர்­வ­மாக உள்­ளோம்,’’ என, மேற்­கா­சிய வளை­கு­டா­வைச் சேர்ந்த, ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸ் அமைச்­சர், சுல்­தான் அக­மது அல் ஜபார் தெரி­வித்­துள்­ளார்.
அவர் மேலும் கூறி­யதா­வது:எங்­க­ளுக்கு மிக முக்­கிய சந்­தை­யாக விளங்­கும் இந்­தி­யா­வு­டன் இணைந்து, கச்சா எண்­ணெய் சேமிப்பு, பெட்­ரோ­லிய ரசா­ய­னம் உள்­ளிட்ட திட்­டங்­களில் முத­லீடு செய்ய ஆர்­வ­மாக உள்­ளோம்.
மஹா­ராஷ்­டிர மாநி­லம், ரத்­ன­கி­ரி­யில், ஆண்­டுக்கு, 6 கோடி டன் பெட்­ரோ­லிய சுத்­தி­க­ரிப்பு தொழிற்­சாலை அமைக்­கும் பணி நடை­பெ­று­கிறது.இதில், ஐக்­கிய அரபு எமி­ரேட்­சின், அரம்கோ மற்­றும் அட்­நாக் நிறு­வ­னங்­கள், 50 சத­வீத பங்கு மூல­த­னம் மேற்­கொள்­கின்றன.
கர்­நா­டக மாநி­லம், மங்­க­ளூரு மற்­றும் படூ­ரில், பூமிக்கு அடி­யில் உள்ள, மத்­திய அர­சின் கச்சா எண்­ணெய் சேமிப்பு கிடங்­கில், அட்­நாக் நிறு­வ­னம், கச்சா எண்­ணெய் சேமிக்க, ஒப்­பந்­தம் செய்­துள்­ளது. அரம்கோ நிறு­வ­னம், இந்­தி­யா­வில், பெட்­ரோ­லிய பொருட்­களின் சில்­லரை விற்­ப­னை­யி­லும் கள­மி­றங்க ஆர்­வ­மாக உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.
உ.பி.,யில், பெட்­ரோ­லிய தொழில்­நுட்ப மாநாட்­டில், சுல்­தான் அக­மது அல் ஜபா­ருக்கு, ‘வாழ்­நாள் சாத­னை­யா­ளர்’ விருதை, பிர­த­மர் மோடி வழங்­கி­னார்.

Source: dinamalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.