Go to ...
RSS Feed

டெல்லியில் ரூ.20 ஆயிரம் கோடி ஹவாலா மோசடி – வருமான வரித்துறை கண்டுபிடித்தது


டெல்லியில் ஹவாலா தரகர்களை கொண்ட 3 குழுக்கள், ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு ஹவாலா மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. #Hawala #Delhi #IncomeTax

புதுடெல்லி:

வருமான வரித்துறையின் டெல்லி புலனாய்வு பிரிவு அதிகாரிகள், பழைய டெல்லியின் வர்த்தக பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அதிரடி சோதனை நடத்தி வந்தனர். அதில், ஹவாலா தரகர்களை கொண்ட 3 குழுக்கள், ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு ஹவாலா மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இந்த அளவுக்கு அவர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம், வரி ஏய்ப்புக்கும் உடந்தையாக இருந்துள்ளனர். ஆண்டு கணக்கில் நடந்த இந்த மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்களும் சோதனையில் கைப்பற்றப்பட்டன. #Hawala #Delhi #IncomeTax

Related Tags :

Source: Maalaimalar